Sunday, April 1, 2012

மென்பொருள் 'லகுடபாண்டிகள் '



சில விதிவிலக்குகள் இருந்தாலும், பெரும்பாலும் இங்கே உலவுவது உள்ளாடைகள் கூட உலக தரத்தில்தான் என்பதை காட்டிக்கொள்ளும் மென்பொருள் லகுடபாண்டிகள்தான்.... (நண்பர்கள் மன்னிக்கவும்!)

1. இங்கே உழுது பயிர் செய்து ஒவ்வொருவரின் வயிறு நிரப்பும் உழவனுக்குக்கூட இல்லாத பெருமித உணர்வு, அயல் தேசம் சென்று அடிமை சேவகம் செய்யும் இவர்களுக்கு இயல்பாகவே வாய்த்து விடுகிறது... நன்றியுள்ள பிராணிகளுக்கு தொங்கும் பட்டை மாதிரி GREEN CARD, PR, ONSITE என்று விதவிதமான பெயர்களில் அலப்பறை வேறு!


2. மாற்று மொழி பிழைப்புக்கு கற்றாலும், என் உணர்வுகளை சொல்ல என் தாய்மொழியை விட வேறு எனக்கு வசதியாய் இருப்பதில்லை... ஹிந்திகாரனிடம் ஹிந்தியும், வெள்ளைக்காரனிடம் ஆங்கிலமும் பேசி தொடர்பு பரிமாறும் அளவுக்கு மொழி புலமை இருந்த போதிலும் முகநூலில் என் மொழி தமிழ்...

சில திருவாள மென்பொருள் நண்பர்கள் கெட்ட கேள்விகள்:

"இன்னுமாட நீ இதை கட்டிக்கிட்டு அழுவுற!"
"நீ மாறவே இல்லை! மச்சி வேற வேலையே இல்லையா உனக்கு!!" (உங்கள் SHIT எனக்கு வேண்டாம்டா சாமிங்களா!)

"அரசியல்ல சேருடா மச்சான்! அம்புட்டு அறிவாளி நீ!"

3. அடிமனசில இருந்து அம்புட்டு உணர்வுகளை தமிழில் கொட்டினாலும் ஒரு சின்ன லைக் கூட போடமாட்டானுங்க... ஆனா நேத்து வெந்த KFC சிக்கன கடிச்சிகிட்டோ, நாளன்னைக்கு வர போற புது கார ஓட்டுற மாதிரி போஸ் குடுத்தா, EYEBROW,FACIAL JEANS+TOP POTTA பொண்ணு கூட போட்டோ போட்டா, எதுனா அடுத்தவன் அழகா கட்டின கட்டிடத்து முன்னாடி போஸ் குடுத்தா 'WOW MACHI GR8' 'DUDE! I DID DIS ALREADY' ன்னு விதவிதமா தொரைங்க அள்ளி கொட்டும்....

4. நீங்க அதுலயும் சில பேரு பண்ற நல்ல காரியம் உங்கள பெத்தவங்கள ஒரு முறையாவது விமானம், அயல்தேசம்ன்னு கூட்டி போயி வருவதுதான்.... அதுங்களும் ஏதோ பிறவி பயனை அடைந்த மாதிரி, வந்த பின்னாடி சாவுற வரைக்கு ஊர்முழுக்க அதே கதை தான்... மனைவியோட பெத்தவங்களுக்கு அடிக்கடி உண்டு இந்த வாய்ப்பு....(என்கூருல பக்கத்து தோட்டத்து கௌண்டர் பையன நெனச்சே பைத்தியம் ஆகிட்டார்....)

5. கூடி கூத்தடிக்கிற பப் கலாசாரம், முன்னாடியே சகஜமா ஓட்டி பார்க்கிற டேட்டிங், எந்த இடத்தில் புதுசா பன்னாட்டு மால் திறந்தாலும் அங்கே செக்யூரிட்டி கணக்கா சுத்துறது இதை தவிர உங்களுக்கு சமூகம் பற்றி என்ன தெரியும் என்று கேட்டா அதெல்லாம் ஓல்ட் பேஷன் என்று ஒதுக்கி தள்ளுவது....

6. விளை நிலங்களை, விலை நிலங்களாக மாற்றியதும், வீடு வாடகை சேட்டு கடை வரை மாதமாதம் நடுத்தர வர்க்கத்தை கொண்டு போய் விட்டதும் உங்கள் அளப்பரிய சாதனைகளில் ஒன்று... உங்களில் யாருக்காவது தக்காளி, வெங்காயம் பேரம் பேசி வாங்க தெரியுமா....

7. நம்மூரு கோவில் முன்னாடி உட்கார்ந்து போஸ் குடுக்கும் உதவி கேட்போர் போல, எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டு கட்டடங்களுக்கு முன்னாடி அப்படி ஒரு போஸ்... கேட்டா வாழ்க்கை வாழ்வதற்காம்... எங்க வாழ்க்கை எல்லாம் என்ன ஏழரை மணி சீரியல் எடுக்கவா? 

8. விமானத்துல பறக்கறதும், அடிக்கடி அயல்தேசம் போய் வருவதும் தான் வெற்றியின் அடையா ளம் என்றால் பர்மா பஜார் குருவிகள் தான் விஸ்வரூப வெற்றியாளர்கள் .....

9.மேல சொன்ன எல்லாதையுமே பொறுத்துக்க லாம் ஆனா படிக்கும் போது லெப்ட், ரைட் ஆவே(அல்லக்கைகள் ன்னு என் வாயால சொல்ல மாட்டேன்) இருந்துட்டு இப்போ ஏ டி எம் ல காசு வந்த அப்புறம் சென்ட்டர் பிகர் மாதிரியே போஸ்! 

10. டேய் டோக் உனக்கு பொறாமைடா என்று மட்டும் என்னை அசிங்கபடுத்தி விடாதீர்கள்! எந்த சுதந்திர நாட்டு நாயும், வால் நறுக்கப்பட்ட, சங்கிலியால் பிணையப்பட்ட நல்ல விலைக்கு விற்கப்படும் அழகு ஜீவன்களை பார்த்து பொறாமை கொள்வதில்லை.... 

Friday, March 16, 2012

நூறு! நூறு!!

சிறுவயதில் அப்பாஆ! என்று இருந்தவரை அப்பா என்ற பாசம் மிக்க நண்பனாய் மாற்றிய ஒத்துப்போன ரசனைகள் மூன்று விசயங்கள் ரஜினி, இளையராஜா, சச்சின்... இவர்கள் தலைப்படும் போதெல்லாம் மறைந்த தந்தை என் தலைகோதும் உணர்வு! 


 


சச்சின் சதம் அடிச்ச பெரும்பாலான போட்டிகளில் இந்தியா தோற்றது என்று ஜோசியம் சொல்லும் அன்பர்களே! அவரு சதம் அடிச்சப்ப மத்த பத்து வெண்ணைகள் என்ன செய்து கொண்டிருந்தன... # நீங்க கொற சொல்லனும்னு கெளம்பிட்டா உங்கள யாரு தடுக்க முடியும் ராசா!



ஒன்னு தெரியாமதான் கேட்கிறேன் இந்த மேட்சுல ஜெயிசிருந்தா கடைசியா ஏமாந்த பங்களா தேஷ் கூட அடிசிட்டாரும்பாங்க... இப்போ தோத்தால ராசி கல்லு போடணுமாம்...

எல்லா நாளும் வேகமா அடிக்க அவரு என்ன பவர் ஸ்டாரா பாஸ்... அவரும் மனுஷன் தானே... அவரோட இதனை வருட உழைப்பை நினைத்து பாருங்க... குறை சொல்ல எதுவுமே திறக்காது...மற்றபடி இந்த கோலிய விட உசுப் பதான் அடிக்காத அடியா பாஸ்... சச்சின் மாதிரி நாம் வாழும் இந்த வாழ்வில் இனி ஒருவர் இல்லை பாஸ்...

அடுத்து என்னன்னா அவர ஒதுக்கி வச்சு அறிவிப்பாளரா ஆக்கனுமா பாஸ் ... ஆண்டவன் ஆட்டம் அதுவா நிக்கிற வரை ரசிப்போம்... அப்புறம் பாப்போம்



நிலாவுல நீல் கால வச்சத நான் பார்கல!; 
எவரெஸ்ட்ல டென் சிங் ஏறினதயும் பார்கல!;

ஆனா இத மட்டும் பார்த்துட்டேன்; வேற பேச மறந்துட்டேன்... 

சச்சின் நான் குழந்தையா இருக்கறப்ப ஆரம்பிச்ச உன் விளையாட்டு என் குழந்தை வருகிற வரை தொடர்கிறது...

உன்ன கலாய்கிறது எல்லாம் சொத்து சொத்துன்னு சாம்பார் ஊத்தாப்பம்.... 
நீயே என்றுமே சகாப்தம் ....

நூறு! நூறு!!


Monday, November 28, 2011

கனிமொழிக்கு ஜாமீன் - மகிழ்ச்சி!

கனிமொழிக்கு ஜாமீன் - மகிழ்ச்சி! 




திரும்பி வராத விட திருந்தி வந்தா தேவலாம்....




இன்றைய தேதியில் சந்தேகமில்லாம அதிக சந்தோசமான தம்பதி ராசாத்தி - கலைஞர் 






 கனிமொழி சென்னை வருகையின் போது வரவேற்பு பலமாக இருக்கும் : அடக்கி வாசிங்க மக்களே! ஆத்தா வெறி ஆகி வோல்டாஸ், வின்ட்சர் எஸ்டேட்,ஆடிட்டர் அக்கௌன்ட்ஸ்னு காட்டு காட்டுன்னு காட்டி மறுபடி பிணைரத்து கொடுத்துட்டு திகார்க்கு ஓட வச்சிட போறீங்க!





விவசாயம், கல்லூரி நிர்வாகம், வணிக மேலாண்மை சுத்தமா தெரியாத போதே வின்ட்சர் எஸ்டேட், சில பல கல்லூரிகள், நிறைய வணிக வாளாகங்கள்னு வளைத்து போட்ட ஒரு கவிதாயினி, சிறையில் மெழுகுவர்த்தி தொழில உருப்படியா கத்துகிட்டு வாரங்களாம்... குடிசை தொழிலா மெழுவர்த்தி தயாரித்து பிழைப்பை நடத்தும் மக்களே உஷார் உசாரய்யா உஷார்!!!





பொறந்து நாற்பத்து மூன்று வருசமா வாராத புத்தி, ஒழுக்கம் தவறாம பிழைப்பு நடத்தணும்கிற எண்ணம், சேவை மனப்பான்மை களவானித்தனம் பண்ணி மாட்டிகிட்டு ஒரு 192 நாள் சிறையில் இருந்தா வந்துரும்னு இந்த சமுதாயம் நம்பினா மொதல்ல அரசியலுக்கு வாரணும்னு துடிக்கிற எல்லா திராவிட குஞ்சுகளையும் திஹார்ல தூக்கி போடுங்க...





உள்ள வச்சு வீணா திராவிட இயக்க வரலாற்றுல தியாகின்னு ஆவணம் பண்ணுவத விட, வெளிய விட்டு உள்ளுக்குள் இருக்கும் பேராசை, அரைவேக்காட்டுதனம், சூதுன்னு தத்து,பித்துன்னு ஆட விட்டு நித்யானந்தா வகையறா தான் என்று நிரூபிப்பதே மேல்!



Sunday, October 23, 2011

நானும் தமிழனாகிவிட்டேன்!

பள்ளி பருவங்களில் இந்தியன் என்று உணர்ச்சி வயப்படுத்தும் தேசிய கீதம், இந்திய ராணுவம், தேசிய பேரழிவு போன்றவை முறையே தற்போது வரிகள் மறந்த பாட்டு, மிலிட்டரி சரக்கு, மற்றுமொரு செய்தி போலவே மாறி தமிழன் என்ற வட்டத்துக்குள் சுருங்கி விட்டேனோ? # உறுத்துது சட்டென!





கூட்டுகுடும்பமா வாழ்ந்தவங்க வசதிக்காக தனி வீடு போன மாதிரி தமிழனா மாறிட்டேன்.
விறைப்பா நின்ன தேசிய கீதம் இப்போது கிரிக்கெட் ஆட்டங்களில் இசைக்கப்படும் போது படுத்துக்கொண்டே ரசிக்கபடுகிறது... குஜராத் பூகம்பத்துக்கு நிவாரண நிதி, கார்கில் நிவாரண நிதி ஓடி ஓடி சேகரித்த தேச உணர்வு இப்போது சீண்டா பொருளாய் முதுகு சொரியும் வேலையிலும்...





நான் தமிழன், நாங்க தமிழர்கள், நாம் தமிழர் என்று சொல்லி சொல்லியே தேச உணர்வு மழுங்கடிக்க பட்டது...இன்னும் பாராளுமன்ற தேர்தலின் ஓட்டு போடறோம்தான?
இலங்கை தமிழர்கள் அனுபவிக்காத துன்பமா இன்னும் கூட பிறந்த நாடு கேட்டா ஸ்ரீலங்கான்னு சொல்றப்ப நமக்கு மட்டும் ஏன் இந்தியன்னு சொல்ல கூசுது... காஷ்மீர நெனச்சு கண்ணீர் வடித்த அந்த நாட்கள், நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாறும் விலங்கை போல, துன்பங்களுக்கு தரும் ஆதரவையும் மாற்றி கொண்டு விட்டோம் சில நல்ல தமிழ் இன தலைவர்களால்.





பிளான் பண்ணி சரக்க அடிக்க வச்சு மச்சான் அவன் என்ன அவமானபடுதிட்டான்டா என்று அழுவரப்ப பிரச்னை புரியாம ஊத்தி விட்ட நன்றிக்கு விடுறா மச்சி அவன தூக்கறோம் என்று கூட போயி குத்து விடற மாதிரி உணர்ச்சி வசபடுத்தி இங்கு குளிர் காயும் திடீர் தமிழின தலைவர்கள் நிறைய பேரால் நானும் தமிழனாகிவிட்டேன்!

Wednesday, October 19, 2011

அன்னா கதாநாயகன் அல்ல...

ஊழலை ஒழித்தே ஆகவேண்டும்... ஆனா அந்த படத்துல அன்னா கதாநாயகன் அல்ல...





சில இன்ஸ்டன்ட் உத்தமர்கள் அநீதி கண்டு பொங்கி வரும் போது, போராட்டம் நடத்தும் போது விருப்பு வெறுப்பில்லாமல் ஆதரவை வழங்கிய போதும், தம்பி நாங்கள் அந்த அளவுக்கு தகுதியானவர்கள் இல்லை "டம்மி பீசு" என்று போக போக நிரூபிக்கும் போது வாராத வருத்தம் "நாங்களெல்லாம் அப்பவே சொன்னோமில்ல" என்று தீர்க்கதரிசிகள் போல எள்ளி நகைக்கும் சில அறிவுஜீவிகளை காணும் போது வருகிறது...





இப்போது பாகிஸ்தானுடன் போர் நடந்தால் கூட நான் போரிடத் தயார்: அன்னா ஆவேசம் # இப்பகூட நான் உங்கள நெனச்சு சிரிக்கல... கண்ணமூடி உங்கள ஆதரிச்ச என்ன நெனச்சு சிரிக்கிறேன்...





 "I SUPPORT ANNA"னு எழுதிகிட்டு திரிஞ்சதுக்கு பதிலா "
I SUPPORT SAKKEELA"னு எழுதிகிட்டு அலஞ்சிருக்கலாம்...





ஊழலை ஒழிக்க வந்த உத்தமன் நாந்தாண்டா என்ற பெருமிதம் அவர் 
முகத்தில் தெரிகிறதே ஒழிய உண்மையான நாட்டுப்பற்று சுத்தமாக 
சவரம் செய்யப்பட்டுள்ளது அவர் முகத்தில்....



ஊழலை ஒழிக்க வெல்லாம் என்கிட்ட திட்டம் இல்லீங்கோ...மற்றபடி என்கிட்ட இருக்கிற தனிமனித அழுக்கை கழுவ இப்பதான் சோப்பு வாங்க கெளம்பறேன்... அன்னா முகவரிக்கும் ரெண்டு டசன் பார்சல்! 





ராம்லீலா மைதானத்துல ஒரு கூட்டத்துக்கு பசி ஆத்தி விட்டத தவிர இவரு இதுவரை பெருசா என்ன சாதிச்சுட்டார்... ஊழலை ஒழித்தே ஆகவேண்டும்... ஆனா அந்த படத்துல இவரு கதாநாயகன் இல்ல...





பன்னாட்டு நிறுவனங்களிடம் காசு வாங்காத, மத ஆதரவு பின்புலம் இல்லாத, அடிக்கடி வடிவேலு பாணி வசனம் பேசாத ஒரு உத்தமன் கதாநாயகனாக தேவை...

Thursday, October 13, 2011

வச்சுக்கோம்மா...

வீட்டுக்கு மளிகை வாங்கி பணம் செலுத்தி விட்டு மிச்சம் சில்லறை மறந்து 
வாகனம் வரை திரும்பி விட்ட நிலையில் ஓடி வந்து புன்னகையுடன் திருப்பி 
தந்த மாதம் இரண்டாயிரத்து சொச்சம் ஊதியம் வாங்கும் அந்த பணி 
பெண்ணின் அடிப்படை நேர்மை சைலன்சர் வடிவில் என்னை சுட்டது...





ஓட்டு பிச்சை கேட்டு வரும் அரசியல் வாதிகளிடம் இந்த நேர்மையில் சிறிது 
இருந்தாலும் நம்ம நாடும் கனவெல்லாம் காணமலேயே வல்லரசு தான்!







கால் வயிறாக இருந்தாலும் நேர்மையுடன் நிறைக்கும் அந்த சிறுமிக்கு முன்னால் சமரசங்களுடன் இடுப்புல கொழுப்பு தேங்க எக்ஸ்ட்ரா திங்கும் என்னை அவள் நேர்மை சுட்டது தகும்...





இந்த சம்பவத்தில் ஹை லைட் என்னன்னா "வச்சுக்கோம்மா " என்ற என்னை ஒரு அசட்டு சிரிப்புடன் மிச்சத்தை கையில் திணித்து மிச்ச வேலை முடிக்க ஓடினது... ரெண்டு தெரு தள்ளி தான் கடை என்றாலும் அங்க இருந்து வீடு வர வெகு நேரம் ஆனது!


இனிமே அத்தைக்கு மீசை முளைக்குமா சதீசு என்று என் மனசு எகத்தாளம் செய்தாலும், வாழ்வின் கணங்களை இனிமேல் குறைந்தபட்ச நேர்மையுடன் அணுகுதல் நலம்... முயற்சிக்கிறேன்!